வரியை ரத்து செய்ய வேண்டும்: சென்னை ஐகோர்ட்டில் ரஜினிகாந்த் மனு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு சொந்தமான திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்துக்கு சென்னை மாநகராட்சி ரூபாய் 6.50 லட்சம் சொத்து வரி விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஜினிகாந்த் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் மத்திய மாநில அரசுகள் விதித்த பொதுமுடக்கத்தால் மண்டபம் வாடகைக்கு விடாமல் காலியாகவே இருந்தது. இதனை அடுத்து சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சென்னை மாநகராட்சி விதித்த 6.50 லட்சம் சொத்து வரிக்கு எதிராக ரஜினிகாந்த் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

சண்டையில் இருந்து சமாதானமா? டூயட் பாடிய சுரேஷ்-அனிதா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடும் போட்டியாளராக கருதப்படும் சுரேஷ் சக்கரவர்த்தி நேற்று எவிக்சன் பாஸை பெற செய்த தந்திரத்தை ரம்யா பாண்டியன் சாதுரியமாக முறியடித்தார் என்பது தெரிந்ததே 

ரொனால்டோவிற்கு கொரோனா பாதிப்பு: நாளை முக்கிய போட்டியில் ஆடவிருந்த நிலையில் அதிர்ச்சி

போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் அவரது மில்லியன் கணக்கான ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது

அச்சு அசலாக முரளிதரனாக மாறிய விஜய்சேதுபதி! வைரலாகும் மோஷன் போஸ்டர்!

பிரபல இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும்

தினம் ஒரு வீடியோ: ரஜினியின் மெகா திட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக தான் அரசியல் கட்சி தொடங்குவது தாமதமாகி வருவதாகவும்

என்னதான் நடக்குது… கண்ணீர் சிந்திய அதிபரைப் பார்த்து வியக்கும் வடகொரிய மக்கள்!!!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, தொடர்ந்து மற்ற நாடுகளைப் பயமுறுத்தும் அளவிற்கு அணு ஆயுதப் பரிசோதனை,