close
Choose your channels

ரஜினி கட்சி மூன்றாவது இடத்தையே பிடிக்கும்: பிரபல அரசியல் கட்சியின் தலைவர்!

Thursday, October 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசியல் கட்சியை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது கட்சியில் பல்வேறு கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் இணைவார்கள் என்றும், அவரது கட்சியை மற்ற நடிகர்களின் கட்சிகள் போல இல்லாமல் அரசியல் பிரபலங்கள் நிறைந்த கட்சியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினியின் அரசியல் வியூகம் என்ன? அவரது கட்சிக்கு கிடைக்கும் மக்கள் ஆதரவு எப்படி இருக்கும்? என்பது குறித்து அறிய மற்ற அரசியல் கட்சியும் பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர், முதல் தேர்தலிலேயே ரஜினி ஆட்சியை பிடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தை பொருத்தவரை அதிமுக திமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கு இடையே மட்டுமே போட்டி இருக்கும் என்றும் வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் இந்த இரு கட்சிகளின் கூட்டணிகளுக்கு இடையே மட்டுமே போட்டி இருக்கும் என்றும், ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் அந்த கட்சியை மூன்றாவது அணி என்று கூறுவார்களே தவிர அந்த அணி இரண்டாவது இடத்தைப் பிடிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment