close
Choose your channels

மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - ஷங்கர்? '3.0' உருவாகிறதா?

Saturday, June 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜெயிலர்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ’லால் சலாம்’ என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.

மேலும் ’ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தலைவர் 170 படத்திலும் அவர் விரைவில் நடிக்க உள்ளார் என்பதும் அதன் பிறகு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ’தலைவர் 171’ படத்திலும் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ’தலைவர் 171’ படம் தான் ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது வந்துள்ள தகவலின் படி ரஜினிகாந்தின் கடைசி படத்தை இயக்க ஷங்கர் விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்படுவதால் மீண்டும் ரஜினிகாந்த் - ஷங்கர் இணைய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த ’எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ’2.0’ படத்தில் மூன்றாம் பாகத்திற்கான லீட் இருந்த நிலையில் தற்போது அந்த படம் ’3.0’வாக படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஷங்கர் தற்போது ’இந்தியன் 2’ மற்றும் ’கேம் சேஞ்சர்’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இதனை அடுத்து அவர் ‘வேள்பாரி’ என்ற படத்தை இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் அதற்கு முன்பே அவர் ’தலைவர் 172’ படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.

ரஜினிகாந்த், ஷங்கர் இணைந்த ‘சிவாஜி’ ’எந்திரன்’ ’2.0’ ஆகிய மூன்று படங்களுமே மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில் ’3.0’ படம் உருவாகுமா? அப்படியே உருவானால் அந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் எது? மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு இந்த படம் வரவேற்பை பெறும்? என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.