'லால் சலாம்' விழாவில் ஐஸ்வர்யா சொன்ன சங்கி வார்த்தை: ரஜினிகாந்த் விளக்கம்..!

  • IndiaGlitz, [Monday,January 29 2024]

சமீபத்தில் ’லால் சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்த போது அதில் பேசிய இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ’தனது அப்பாவை சங்கி என்று கூறுவது தனக்கு வருத்தமாக இருக்கிறது என்றும் அவர் சங்கியாக இருந்தால் ’லால் சலாம்’ போன்ற படங்களில் நடித்திருக்க மாட்டார்’ என்றும் கூறினார்.

இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் இது குறித்த கேள்விக்கு ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார். ’லால் சலாம்’ படத்தை விளம்பரப்படுத்தவே சங்கி என்ற வார்த்தையை ஐஸ்வர்யா பேசியிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறதே என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ரஜினிகாந்த் ’சங்கி’ என்பது கெட்ட வார்த்தை என்று ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஆன்மீகவாதி, எல்லா மதங்களையும் விரும்புபவர், அவரை ஏன் இப்படி சொல்கிறார்கள் என்பதே அவருடைய பார்வை என்று கூறினார்

இதனை அடுத்து செய்தியாளர் ’லால் சலாம்’ புரமோஷனுக்காக ஐஸ்வர்யா அப்படி பேசினாரா என்று கேட்டதற்கு ’அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை’ என்று கூறினார்

இதனை அடுத்து ’லால் சலாம்’ படம் எப்படி வந்துள்ளது என்று கேட்டதற்கு ’நன்றாக வந்திருக்கிறது, சூப்பராக வந்திருக்கிறது’ என்று கூறினார். இந்த படத்தில் என்ன கருத்து உள்ளது என்று கேட்டதற்கு ’நீங்கள் படம் பார்த்தால் தெரியும், மத நல்லிணக்கத்தை பற்றி சொல்லியிருக்கிறார்கள்’ என்று ரஜினிகாந்த் கூறினார்.

More News

69வது பிலிம்பேர் விருதுகள்: தலா 5 விருதுகளை அள்ளிய மூன்று திரைப்படங்கள்..!

 69 ஆவது பிலிம்பேர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் மூன்று பாலிவுட் திரைப்படங்கள் தலா 5 விருதுகளை அள்ளி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? கணவருடன் வித்தியாசமான கேம் விளையாடிய அமலாபால்..

நடிகை அமலாபால் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் தனக்கு பிறக்கப் போவது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? அல்லது இரட்டை குழந்தைகளா? என்ற விளையாட்டை தனது

ஒரு அதிசய பெண்ணை பார்த்தேன்.. வார்த்தைகளால் விளக்க முடியவில்லை: KPY பாலா

 விஜய் டிவி பிரபலமாக KPY பாலா ஒரு அதிசய பெண்ணை பார்த்ததாகவும் அந்த பெண்ணை பார்த்ததும் அவர் செய்த காரியத்தால் தனக்கு வார்த்தைகளே வெளிவரவில்லை என்றும் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதுவரை நடிக்காத கதைக்களம்.. முதல்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில்.. 'தலைவர் 171' படத்தின் மாஸ் தகவல்கள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'லால் சலாம்' திரைப்படம் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் 'வேட்டையன்'

முருகதாஸ் செய்தது போல் லோகேஷ் கனகராஜ் செய்திருக்கலாம்: எஸ்.ஏ சந்திரசேகர்

'துப்பாக்கி' படம் எடுக்கும்போது அந்த படத்தின் கதை குறித்து நான் இயக்குனர் முருகதாஸிடம் ஒரு சந்தேகம் கேட்டேன். அதை அவர் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப ஒரு காட்சியை கூடுதலாக வைத்தார்.