உயிர் நண்பருக்காக 'கபாலி' ஸ்பெஷல் காட்சி: ரஜினி திட்டம்

  • IndiaGlitz, [Monday,July 25 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓய்வை முடித்துவிட்டு அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். சென்னை விமான நிலையத்தில் ரஜினிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேலும் 'கபாலி'யின் வெற்றியால் ரஜினி மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் நாடு திரும்பியதும் தனது உயிர் நண்பர் கமல்ஹாசனின் உடல்நிலை குறித்து ரஜினி அக்கறையுடன் விசாரித்ததாகவும், கமல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன் அவருக்காக 'கபாலி' படத்தின் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஓய்வு மற்றும் மருத்துவ சோதனை ஆகியவற்றை முடித்துவிட்டு புத்துணர்ச்சியுடன் உள்ள ரஜினிகாந்த் விரைவில் ஷங்கரின் '2.0' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இளையதளபதி விஜய்?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னை, மற்றும்...

தமிழில் மேலும் ஒரு 'நம்பர்' படம்

தமிழ் திரையுலகில் ஏற்கனவே 24, 144, 46ஓ உள்பட பல திரைப்படங்கள் நம்பர்களின் டைட்டிலில் வெளிவந்துள்ள நிலையில்...

விஜய் பாணியை வித்தியாசமாக மாற்றிய சந்தோஷ் நாராயணன்

இளையதளபதி விஜய் கடந்த சில ஆண்டுகளாக தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலை பாடி வரும் நிலையில் ...

ஆகஸ்ட் 2 முதல் 'ரெமோ'வின் முக்கிய பணி தொடக்கம்

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'ரெமோ' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

'கபாலி'யின் வார இறுதி வெளிநாட்டு வசூல் நிலவரம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி உலகம் முழுவதும் பெருவாரியான வசூலை குவித்து இரண்டே நாட்களில் ரூ.100 கோடி...