மாவட்ட செயலாளர்களை சந்திக்கும் ரஜினி: இன்று முக்கிய அறிவிப்பா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இன்று ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை அவர் சந்திக்கிறார். இதனை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட செயலாளர்கள் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கூடி உள்ளனர். அவர்களை சந்திப்பதற்காக ரஜினி சற்று முன்னர் தனது போயஸ் கார்டன் வீட்டிலிருந்து கிளம்பி தற்போது ஸ்ரீ ராகவேந்திரா மண்டபத்தை அடைந்துள்ளார்.

இன்று நடைபெறும் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் ரஜினிகாந்த் முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருப்பதாகவும், அரசியல் கட்சி தொடங்குவது, காலியாக உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுவது ஆகியவை குறித்து முக்கிய ஆலோசனை இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மாவட்ட செயலாளர்கள் உடனான சந்திப்பு முடிந்ததும் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினி இன்று ராகவேந்திரா மண்டபத்தில் வருகை தருவதாக செய்திகள் வெளிவந்ததை அடுத்து ரஜினி ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் அந்த மண்டபத்தின் முன் கூடி உள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

More News

கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்: தமிழ் திரைப்பட நடிகர் கைது 

சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு மாதுளை பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த தமிழ் திரைப்பட நடிகர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெஸ்லா சோலார் பேனல்கள் உதவியால் உப்புத் தண்ணீரை குடிநீராக்கிக் குடித்த மக்கள்..!

ஒரு அரசு சாரா நிறுவனமானது சோலார் பேனல்கள் உதவியோடு உப்பு நீரை தூய்மையான குடிநீராக்கும் திட்டத்தை கென்யாவில் தொடங்கியுள்ளது. இதன் மூலம் 35,000 மக்கள் நல்ல குடிநீர் கிடைத்து அதை பருகி மகிழ்ந்தனர்.

கொரோனா அச்சம்.. ஒரு ஊரே வீட்டுக்குள்ளே முடங்கிக்கிடக்கும் அவலம்..!

இங்குள்ள தெருக்கள் வீடுகள் எல்லாம் மிக அமைதியாக எதோ கைவிடப்பட்ட நகரம் போல் காட்சியளிப்பதாக ஹைதராபாத் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

சாகச பிரியரான காட்டு மனிதன் பேர் கிரில்ஸ்; தெரிவிக்க விடும் திரில் பட்டியல்

முதுகு எலும்பு மூன்றாக உடைந்து மறுபடியும் எழுந்து நடக்கவே முடியாது என மருத்துவர்கள் கைவிரித்த ஒரு மனிதன்,

நேற்று 5.. இன்று 28.. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கை..!

இருமல், தொண்டைவலி, காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். வீட்டிலேயே இருக்க வேண்டாம்.