close
Choose your channels

ரஜினி பிறந்த நாளில் வெளியாகும் ரீரிலீஸ் ஆகும் சூப்பர் ஹிட் படம்

Tuesday, November 1, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான மெகா சூப்பர் ஹிட் படம் 'பாட்ஷா'. இந்த படம் வெளியாகி 20 வருடங்களுக்கு மேல் ஆகியும் இந்த படத்திற்கு இணையாக ஒரு ஆக்சன் படம் இன்னும் வரவில்லை. தொலைக்காட்சிகளில் இப்போது ஒளிபரப்பப்பட்டாலும் அனைத்து தரப்பு மக்களும் விரும்பி பார்க்கும் படம் இதுதான்.
இந்நிலையில் இந்த படம் தற்போது டிஜிட்டலில் ரீமாஸ்டர் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்த படம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்த நாள் அன்று வெளியாகும் என கூறப்படுகிறது.
சத்யா மூவீஸ் தயாரிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்த 'பாட்ஷா' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நக்மாவும், வில்லனாக ரகுவரனும் நடித்திருந்தனர். தேவா இசையமைப்பில் வெளியான இந்த படத்தை டிஜிட்டலில் பார்க்க ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.