close
Choose your channels

'அபூர்வ ராகங்கள்' படத்திற்கு முன்பே நடித்த ரஜினிகாந்த்: வைரல் புகைப்படம்!

Thursday, March 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் இமயம் கே பாலச்சந்தர் இயக்கிய ’அபூர்வ ராகங்கள்’ என்ற திரைப்படத்தில் தான் முதன்முதலாக நடிகராக அறிமுகமானார் என்றும் அதன்பிறகு படிப்படியாக வில்லன், ஹீரோ என நடித்து, பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக உள்ளார் என்பதும் அனைவரும் அறிந்ததே .

இந்நிலையில் அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் அறிமுகமாவதற்கு முன்பே ரஜினிகாந்த் மேடை நாடகங்களில் நடித்து உள்ள தகவல் வெளியானாலும் அது குறித்த எந்த புகைப்படமும் வெளியாகவில்லை. இப்போது முதல் முறையாக ரஜினிகாந்த் மேடை நாடகம் ஒன்றில் நடித்த போது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள்’ படத்திற்கு முன்பு கர்நாடகாவில் மேடை நாடகத்தில் ரஜினிகாந்த், தனது ஒரிஜினல் பெயரரான சிவாஜி ராவ் பெயரில் நடித்துள்ளார். இந்த மேடை நாடகத்தின் ஒரு காட்சியில் ரஜினிகாந்த் கையில் தீப்பந்தத்தை வைத்திருப்பது போன்ற ஒரு புகைப்படம்தான் இப்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை ரஜினி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் 169வது திரைப்படத்தை நெல்சன் இயக்க உள்ளார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை அனிருத் இசையமைக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.