close
Choose your channels

படக்குழுவுடன் உற்சாகமாகப் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்!

Sunday, October 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப்பல மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம்வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தற்போது தனது 30 ஆவது பிறந்தநாளை பாலிவுட் படக்குழுவுடன் உற்சாகமாகக் கொண்டாடியுள்ளார். அதுகுறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

ரகுல் ப்ரீத் சிங் கடந்த அக்டோபர் 10, 1990 இல் பிறந்தவர். இவர் பிசிஎஸ்சி ஹானர்ஸ் கணிதம் படித்துக் கொண்டிருக்கும்போதே மாடலிங் துறைக்கு வந்துவிட்டார். அதேபோல பட்டப்படிப்பை படித்து முடிப்பதற்கு முன்பே சினிமாவிலும் அறிமுகமாகி விட்டார். அந்தவகையில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தமிழில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற திரைப்படம் “7ஜி ரெயின்போ காலனி“. இந்தப் படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்து கடந்த 2009 ஆம் ஆண்டு சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதற்குபிறகு தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் “தடையறத் தாக்க“ எனும் திரைப்படத்தில் அறிமுகமான இவர், அதற்குபிறகு நடிகர் சூர்யாவுடன் “NGK“, நடிகர் கார்த்திக்குடன் “தீரன் அதிகாரம் ஒன்று“, “தேவ்“, “ஸ்டைர்“, “என்னமோ ஏதோ“ போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் “அயலான்“ திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் கமலுடன் “இந்தியன்2“ படத்திலும் இணைந்திருக்கிறார். இந்நிலையில் தற்போது இந்தியிலும் பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

அந்த வகையில் “Yariyan“ எனும் பாலிவுட் சினிமாவில் நடித்துவரும் நடிகை ரகுல் பீரித் சிங் அந்தப் படக்குழுவுடன் இணைந்து தனது 30 ஆவது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மிடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் அவரது ரசிகர்கள் நடிகை ரகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.