close
Choose your channels

கோடைக்கேற்ற ஆடை: ரம்யா பாண்டியனின் புதிய போட்டோஷூட்டுக்கு ரசிகர்களின் கமெண்ட்ஸ்!

Tuesday, April 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் பிக்பாஸ் சீசன் 4 ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன் என்பது தெரிந்ததே. ஏற்கனவே ’ஜோக்கர்’, ‘ஆண் தேவதை’ உட்பட ஒரு சில படங்களில் ரம்யா பாண்டியன் நடித்திருந்தாலும் ஒரே ஒரு போட்டோ ஷூட்டில் அவர் உலகம் முழுவதும் பிரபலம் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக உள்ளார் என்பதும் அவ்வப்போது புதிய போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அவர் பச்சை உடையில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். கிளாமர் மற்றும் கொள்ளை அழகு நிறைந்த இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். குறிப்பாக அவரது மேலாடையை பார்த்து கோடைக்கேற்ற ஆடை என்று வர்ணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

நடிகை ரம்யா பாண்டியன் சமீபத்தில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பதும் இந்த திரைப்படத்தில் வாணிபோஜன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.