close
Choose your channels

'வேட்டையன்' படப்பிடிப்பில் முதல் நாள்.. பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்..!

Monday, March 4, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் முதல் நாள் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக பிரபல நடிகர் ஒருவர் இந்த படத்தின் கெட்டப்புடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’வேட்டையன்’.

இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையுள்ள நிலையில் இந்த படத்தில் இன்று முதல் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக ’பாகுபலி’ உள்பட பல படங்களில் நடித்த நடிகர் ரானா டகுபதி தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை செய்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்தில் அவர் ’வேட்டையன்’ படத்தின் கெட்டப்பில் இருப்பதை அடுத்து இந்த புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.

ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா ரகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகினி, ரமேஷ் திலக் , ஜிஎம் சுந்தர் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவும், பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணியை செய்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment