பிரபல தயாரிப்பாளர் மீது பாலியல் வழக்கு: நடிகையின் புகாரால் பரபரப்பு

  • IndiaGlitz, [Saturday,January 05 2019]

பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளர் மீது, நடிகை ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரோல் மாடல்ஸ், வெல்கம் டு சென்ட்ரல் ஜெயில் உள்பட ஒருசில திரைப்படங்களை தயாரித்தவர் வைஷாக் ராஜன். இவர் மீது மாடல் அழகி ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் செக்சன் 376 பிரிவின்படி வழக்குப்பதிவு செய்து எர்ணாகுளம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு வைஷாக் ராஜனுக்கு சொந்தமான பங்களாவில் நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக நடிகை கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகர் திலீப் மீது பிரபல நடிகை ஒருவர் கொடுத்த பாலியல் புகார் மலையாள திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் தற்போது தயாரிப்பாளர் ஒருவர் மீதும் பாலியல் புகார் கூறப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைஷாக் ராஜன் தயாரித்த படங்களில் ஒன்றான 'வெல்கம் டு சென்ட்ரல் ஜெயில்' திரைப்படத்தில் திலீப் ஹீரோவாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'விஸ்வாசம்' படம் பார்த்த ஷாலினி அஜித்! வைரல் புகைப்படம்

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வெளியாக இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே இருப்பதால் அஜித் ரசிகர்கள் கடந்த சில நாட்களாக 'விஸ்வாசம்' திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.

தூக்கு துரையின் சொந்த ஊரில் அஜித் ரசிகர்கள் கைது

தல அஜித் 'தூக்குதுரை' என்ற கேரக்டரில் நடித்துள்ள 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

ரஜினி-கமல் படங்களை மிஸ் செய்த மிஸ் செளத் இந்திய அழகி

ரஜினியுடன் நடிக்கும் ஒரு வாய்ப்பையும், கமல்ஹாசன் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பை கடந்த 2018ஆம் ஆண்டு மிஸ் செளத் இந்திய அழகியும் நடிகையூமான மீரா மிதுன் இழந்துள்ள செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

19 வருடங்களுக்கு முன் தொடங்கிய படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்

கடந்த 2001ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கத்தில் 'ஏலேலோ' என்ற திரைப்படம் உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

'பொன்னியின் செல்வன்' படத்தில் அமிதாப்பச்சன்- ஐஸ்வர்யாராய்?

'பொன்னியின் செல்வன்' என்ற கல்கி எழுதிய காலத்தால் அழியாத காவிய நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் எம்.ஜி.ஆர். , சிவாஜி கணேசன், கமல்ஹாசன் உள்பட பலர் முயற்சி செய்தனர். ஆனால் இதுவரை அது நிறைவேறவில்லை