close
Choose your channels

ரஜினி-கமல் படங்களை மிஸ் செய்த மிஸ் செளத் இந்திய அழகி

Friday, January 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கும் ஒரு வாய்ப்பையும், கமல்ஹாசன் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பை கடந்த 2018ஆம் ஆண்டு மிஸ் செளத் இந்திய அழகியும் நடிகையூமான மீரா மிதுன் இழந்துள்ள செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் வரும் 10ஆம் தேதி வெளிவரவுள்ள 'பேட்ட' படத்தில் த்ரிஷாவின் கேரக்டரில் நடிக்க முதலில் மீரா மிதுன் தான் தேர்வு செய்யப்பட்டார். லுக் டெஸ்ட், ஸ்கிரீன் டெஸ்ட் வரை சென்றுவிட்ட மீரா, பின் திடீரென அந்த படத்தில் தேர்வாகவில்லை. அதன்பின் அந்த கேரக்டரில் த்ரிஷா நடித்தார்.

அதேபோல் கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம், அக்சராஹாசன் நடித்து வரும் 'கடாரம் கொண்டான்' படத்திலும் நடிக்க மிரா மிதுனுக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் இந்த படமும் சில காரணங்களால் மிஸ் ஆகிவிட்டது.

நடிகை மீரா மிதுன் ஏற்கனவே சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் கலையரசனுக்கு ஜோடியாகவும், '8 தோட்டாக்கள்' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தகக்து.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.