close
Choose your channels

நான் அறைஞ்சிருப்பேன் உன்னை.. மணியை கண்டித்த ரவீனா அம்மா...

Thursday, December 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் உறவினர்கள் வருகை தரும் வாரம் என்பதால் இதுவரை ஜாலியாக இருந்தது என்பதை பார்த்தோம். கடந்த சீசன்களில் உறவினர்கள் வரும்போது போட்டியாளர்களின் குறைகளை சுட்டிக்காட்டி கண்டித்தனர் என்பதை பார்த்தோம். ஆனால் இந்த சீசனில் இதுவரை வந்த உறவினர்கள் சாஃப்ட்டாகவே நடந்து கொண்டனர் என்பதும் யாரும் யாரையும் கண்டிக்கவில்லை என்பதையும் பார்த்து வருகிறோம்

ஆனால் தற்போது ரவீனா அம்மா வந்து ரவீனாவையும் மணியையும் கண்டிக்கும் காட்சிகள் முதல் புரோமோவில் இடம் பெற்றுள்ளது. முதலில் ரவீனாவிடம் பேசும் அவருடைய அம்மா ’நான் அறைஞ்சிருப்பேன் உன்னை, உண்மையாகவே எனக்கு அவ்வளவு கோபம் வந்தது, மணி எல்லார்கிட்டயும் அம்மா ஒத்துக்கிட்டாங்கன்னு சொல்லிட்டு இருக்கான்’ என்று கோபமாக பேசுகிறார்

மேலும் ‘அவனுக்காக நீ விளையாட வேண்டாம், இது உனக்கு தேவை கிடையாது’ என்று அறிவுரை கூறுகிறார். ரவீனாவும் அவருடைய அம்மாவும் பேசுவதை மிகவும் சோகத்தோடு மணி பார்த்துக் கொண்டிருக்கிறார்

இதனை அடுத்து மணி இடம் வரும் ரவீனாவின் அம்மா, ‘இரண்டு பேரும் தனியா உக்கார்ந்து பேசுறதுக்கா ஷோவுக்கு வந்தீங்க.. அவளை இனிமேல் கூப்பிட்டு வச்சு பேசுறத தயவு செய்து பண்ணாதீங்க’ என்று கறாராக கூறுகிறார். இதனை அடுத்து ரவினா, மணி இருவரின் நடவடிக்கைகள், விளையாட்டுக்கள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.