close
Choose your channels

இனிமேல் அடிக்கடி இப்படி பண்ணலாம்ன்னு இருக்கேன்... 'மெர்ரி கிறிஸ்துமஸ்' டிரைலர்..!

Wednesday, December 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் சேதுபதி மற்றும் கேத்ரினா கைஃப் நடித்த பாலிவுட் திரைப்படமான ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆகயிருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கிறிஸ்துமஸ்ஸை மையமாகக் கொண்டிருக்கும் இந்த படத்தின் கதை டைம் டிராவல் கொண்ட படமாக தெரிகிறது. விஜய் சேதுபதி தனது மனைவி கேத்ரினா மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் டைம் ட்ராவல் காரணமாக ஏற்படும் விபரீதம், ஒரு பெண்ணை விஜய் சேதுபதி வீட்டுக்கு அழைத்து வருவதால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் ஒரு கொலை என இரண்டாம் பாதிக்கு மேல் கதை விறுவிறுப்பாக செல்லும் என்று இந்த ட்ரெய்லர் இருந்து தெரிய வருகிறது

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், ப்ரீத்தம் இசையில் உருவாகிய இந்த படத்தில் விஜய் சேதுபதி, கேத்ரினாவுடன் ராதிகா சரத்குமார், ராதிகா ஆப்தே, அஸ்வின் கலாசேகர் சண்முகராஜா, கவின் ஜெபாபு, ராஜேஷ் வில்லியம்ஸ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.