close
Choose your channels

இவ்வளவு தெளிவா பிளே பண்ணியிருக்கான்னா, அவன் சாதாரண ஆள் இல்லை: 'ரன் பேபி ரன்' டிரைலர்

Friday, January 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான ’ரன் பேபி ரன்’ என்ற திரைப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகிய இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதுவரை வெளியான ஆர்.ஜே பாலாஜியின் திரைப்படங்கள் நகைச்சுவையுடன் கூடிய சமூக கருத்துக்களை கூறும் படங்களாக இருந்த நிலையில் முதல் முறையாக த்ரில் கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் ஆர்ஜே பாலாஜி நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது.

இந்த படத்தின் டிரைலரில் ஒரு கொலை வழக்கில் சிக்கிய ஆர்ஜே பாலாஜி அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் படத்தின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்முறையாக ஆர்ஜேபாலாஜி படம் முழுக்க சீரியஸ் ஆக வருகிறார் என்பது ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது. அதே போல் ஐஸ்வர்யா ராஜேஷ் கேரக்டர் இந்த படத்தின் முதுகெலுங்குபாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை அடுத்து ஆர்ஜே பாலாஜிக்கு மீண்டும் ஒரு வெற்றி படமாக இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் உருவாகிய இந்த படம் ரசிகர்கள் மனதை கவருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.