'தளபதி' படத்துடன் மோதும் 'தல' ரசிகரின் படம்

  • IndiaGlitz, [Wednesday,September 05 2018]

தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியிட அனைத்து முயற்சிகளையும் படக்குழுவினர் எடுத்து வருகின்றனர். எனவே இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் இதே தீபாவளி தினத்தில் தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படமும் வெளிவரவுள்ளதாக இன்று மறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தல அஜித்தின் வெறித்தனமான ரசிகரும், பிரபல தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் நடித்த 'பில்லா பாண்டி' திரைப்படமும் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் அஜித்தின் 'விஸ்வாசம்' தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கோலிவுட் ஸ்டிரைக் காரணமாக படப்பிடிப்பு தாமதம் ஆனதால் அந்த படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. தற்போது 'தல' படத்திற்கு பதிலாக 'தல' ரசிகரின் படம் வெளியாவதால் இந்த படத்திற்கு தல ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்.கே.சுரேஷ், சாந்தினி, இந்துஜா உள்பட பலர் நடித்துள்ள 'பில்லா பாண்டி' படத்திற்கு இளையவன் இசையமைத்துள்ளார். ராஜ்சேதுபதி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

More News

தப்பியோடிய அதிமுக எம்.எல்.ஏவின் மணப்பெண் கூறிய காரணம்

பவானிசாகர் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ ஈஸ்வரன் என்பவருக்கு 23 வயது சந்தியா என்ற பெண்ணை நிச்சயம் செய்து வரும் 12ஆம் தேதி திருமணம் நடத்த இருவீட்டார் திட்டமிட்டிருந்தனர்.

ஒரே வார்த்தையில் விஜிக்கு பல்பு கொடுத்த மும்தாஜ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்களின் உண்மையான சொரூபம் தற்போது வெளிவந்து கொண்டிருப்பதால் நிகழ்ச்சியும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது

ஆசிரியர் தினத்தில் அட்லி கொடுத்த குருதட்சணை

இன்று ஆசிரியர் தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு கொண்டாடப்படும் இந்த ஆசிரியர் தினத்தில்

மும்தாஜூடன் விஜி மோதல்: உச்சக்கட்டத்தில் பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரிரு வாரத்தில் முடிவடையவுள்ளதால் போட்டியாளர்கள் தங்களை காப்பாற்றி கொள்ளவும், சக போட்டியாளர்களை வெளியேற்றவும் எதையும் செய்ய தயாராக உள்ளனர்.

செண்ட்ராயனுக்காக ஐஸ்வர்யா செய்வது தியாகமா? நாடகமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதை அடுத்து போட்டியாளர்களிடையான போட்டியும் கடுமையாகிவிட்டது. சக போட்டியாளர்களை வெளியேற்ற எதையும் செய்ய போட்டியாளர்கள் தயாராகிவிட்டனர்.