2வது டெஸ்ட்டில் ரோஹித், அஸ்வின் நீக்கம்! இந்திய அணி அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,December 13 2018]

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி கடந்த 6ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் புஜாரே மற்றும் அஸ்வின் அபாரமாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடி தந்தனர்.

இந்த நிலையில் நாளை தொடங்கவுள்ள 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் டெஸ்ட்டில் நன்றாக பந்துவீசிய அஸ்வின் பெயர் இடம்பெறவில்லை. அதேபோல் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரோஹித்தும் இல்லை. இருவரும் காயம் அடைந்திருப்பதால் அணியில் இடம்பெறவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக இந்திய அணியில் ஹனுமா விஹாரி இடம்பெற்றுள்ளார். இருப்பினும் இவர் 11 பேர் அணியில் இருப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேபோல் அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா களமிறங்குகிறார். முரளிவிஜய், கே.எல்.ராகுல் இருவரும் கடந்த டெஸ்ட் போட்டியில் ஜொலிக்கவில்லை என்றாலும் 2வது டெஸ்ட்டில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய அணியில் விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், ராகுல், புஜாரா, ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், ஜடேஜா, இஷாந்த் சர்மா, ஷமி, பும்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் விளையாடும் 11 பேர் கொண்ட அணி போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அறிவிக்கப்படும்

More News

'நாடோடிகள் 2' படத்தை அடுத்து மீண்டும் ஒரு 2ஆம் பாக படத்தில் சமுத்திரக்கனி

கடந்த 2009ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கிய 'நாடோடிகள்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக 'நாடோடிகள் 2'

இஷா அம்பானி திருமண நிகழ்ச்சியில் ரஜினி: சிறப்பான வரவேற்பு

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணம் நேற்று மும்பையில் மிக ஆடம்பரமாக நடைபெற்றது. இந்த திருமணத்தின் நிகழ்ச்சிகள் கடந்த ஒரு வாரமாக நடந்து கொண்டிருந்த

ஆரவ்வுடன் இணைந்த ஓவியா! ஆர்மிகள் அதிருப்தி

பிக்பாஸ் புகழ் ஓவியா, அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்ற ஆரவ்வை காதலிப்பதாக கூறப்பட்டது.

பிரபல தமிழ் தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா' நடித்த 'நோட்டா' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.

கார்த்தியின் 'தேவ்' சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த சில நாட்களாக 'விஸ்வாசம்', பேட்ட, மாரி 2, உள்பட பல படங்களில் சிங்கிள் பாடல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அடுத்ததாக கார்த்தி நடித்து முடித்துள்ள