close
Choose your channels

பிரபல தமிழ் தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் விஜய் தேவரகொண்டா

Thursday, December 13, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தமிழ் தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் விஜய் தேவரகொண்டா

அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா' நடித்த 'நோட்டா' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.

இந்த நிலையில் நோட்டாவை அடுத்து விஜய் தேவரகொண்டா மீண்டும் தமிழ், தெலுங்கில் உருவாகும் படமொன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீகார்த்திக் இயக்கவுள்ளார். இந்த படத்தின் நாயகி தேர்வு நடைபெற்று வரும் நிலையில் முக்கிய வேடத்தில் யோகிபாபு, பிரியதர்ஷி மற்றும் ராகுல் ராமகிருஷ்ணா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக எஸ்.ஆர்.பிரபு அவர்கள் தனது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மூலம் இந்த படத்தை தயாரிக்கின்றார். இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருவதாகவும், விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.