close
Choose your channels

ஆரவ்வுடன் இணைந்த ஓவியா! ஆர்மிகள் அதிருப்தி

Thursday, December 13, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் புகழ் ஓவியா, அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்ற ஆரவ்வை காதலிப்பதாக கூறப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்திருந்த ஓவியா ஆர்மியினர், பின்னர் தான் யாரையும் காதலிக்கவில்லை, தான் ஒரு சிங்கிள்தான் என்ற டுவீட்டை ஓவியா பதிவு செய்ததால் குஷியாகினர்.

இந்த நிலையில் சமீபத்தில் ஆரவ் ஹீரோவாக நடிக்கும் 'ராஜபீமா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிகை ஓவியா ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. இந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஓவியா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தையும் தாண்டி முக்கிய கேரக்டரில் நடிப்பதாக ஆரவ் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆரவ்-ஒவியா இருவரும் நடனம் ஆடிய குத்துப்பாடலின் படப்பிடிப்பு ஒன்று சமீபத்தில் பொள்ளாச்சி அருகே படமாக்கப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர். ஆரவ் நடிக்கும் படத்தில் ஓவியா நடித்து வருவதை ஓவியாவின் ஆர்மிகள் அதிருப்தியான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.