close
Choose your channels

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் 'ஆர்.ஆர்.ஆர்' நாயகி?

Saturday, February 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காரைக்குடியில் பூஜையுடன் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிக்க சாய்பல்லவி மற்றும் ஆலியாபட் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தின் நாயகி வெளிநாட்டு பெண் கேரக்டர் என்பதால் வெளிநாட்டு நடிகையை நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது எஸ்எஸ் ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் நாயகியாக நடித்த பிரிட்டன் நடிகை ஒலிவியா மோரிஸ் சிவகார்த்திகேயனின் 20-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

தற்போது காரைக்குடியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு அடுத்ததாக புதுவை மற்றும் லண்டனில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.