'வலிமை' மோதலை தவிர்க்க 'ஆர்.ஆர்.ஆர். படக்குழு போட்ட திட்டம்!

  • IndiaGlitz, [Wednesday,September 29 2021]

தல அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில் உருவான ’வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டு பொங்கல் என சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அதே பொங்கல் தினத்தில் பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர். என்ற திரைப்படம் வெளியாகும் என செய்திகள் வெளி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரே நேரத்தில் தென்னிந்தியாவில் உள்ள இரண்டு பிரபலங்களின் திரைப்படங்கள் வெளியாவதால் திரையரங்குகள் எந்த படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது.

இந்த நிலையில் ’வலிமை’ மோதலை தவிர்ப்பதற்காக ‘ஆர்.ஆர்.ஆர். படக்குழு அந்த படத்தை ஜனவரி 8ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது. ஜனவரி 8ஆம் தேதி ‘ஆர்.ஆர்.ஆர். திரைப்படமும் ஜனவரி 14ஆம் தேதி ’வலிமை’ படமும் வெளியானால் இரண்டு திரைப்படங்களுக்கும் நல்ல வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஷங்கர் படத்தில் நடிக்கும் நடிகைக்கு இத்தனை கோடி சம்பளமா? ஆச்சரியத்தில் திரையுலகம்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் தேஜா நடிக்கும் திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்

'தி நியூயார்க் டைம்ஸ்' தேர்வு செய்த சிறந்த 5 படங்களில் ஒன்று தனுஷ் படம்!

ஓடிடியில் பார்ப்பதற்கான சிறந்த 5 திரைப்படங்களை 'தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தேர்வு செய்துள்ள நிலையில் அதில் ஒன்று தனுஷ் நடித்த தமிழ் படம் என்பது தமிழ் திரைப்பட உலகிற்கு பெருமை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 'மாஸ்டர்' நடிகரும் ஒரு போட்டியாளரா?

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்த ஒருவர் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 வது சீசனில் போட்டியாளர் என செய்திகள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'பீஸ்ட்' படப்பிடிப்பிற்காக சென்னை வந்த பூஜா ஹெக்டே: வைரல் புகைப்படம்!

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நேற்று முதல் தொடங்கியது என்பதையும் நேற்றைய படப்பிடிப்பில் விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர்

பால்கனியில் காதலனோடு உல்லாசம்: மாடியில் இருந்து கார் மேல் விழுந்த இளம்பெண்!

பால்கனியில் காதலனுடன் உல்லாசமாக இருந்த இளம் பெண் ஒருவர் திடீரென எதிர்பாராத விதமாக பால்கனியிலிருந்து பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது விழுந்த சம்பவம் பெரும்