என்ன மச்சான்? நான் ரொம்ப அழகா?  முன்னாள் பிக்பாஸ் நடிகையின் அழகிய வீடியோ

  • IndiaGlitz, [Sunday,December 20 2020]

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரும் நடிகையுமான சாக்ஷி அகர்வால் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவரது மில்லியன்கணக்கான ஃபாலோயர்களால் வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே

அந்த வகையில் சற்றுமுன் அவர் பதிவு செய்துள்ள வீடியோவில் கேப்ஷனாக ’என்ன மச்சான், நான் அழகா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் அந்த வீடியோவில் யுவன் சங்கர் ராஜா இசையில் விஷால் நடித்த ’சமர்’ படத்தில் இடம் பெற்ற ‘அழகோ அழகு அவள் பேரழகு’ என்ற பாடலுக்கு மிக அழகாக நடனமாடி உள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது

இதனை அடுத்து அவர் பதிவு செய்துள்ள இன்னொரு பதிவில், தனிமையில் நிற்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவு செய்து ’நான் தனியாக நிற்கிறேன் என்றால் தனியாக இருக்கிறேன் என்று அர்த்தமல்ல. எந்த ஒரு விஷயத்தையும் நான் தனியாக கையாளும் அளவுக்கு வலிமையானவர் என்பது பொருள்’ என்றும் பதிவு செய்துள்ளார். சாக்‌ஷி அகர்வாலின் இந்த இரண்டு லேட்டஸ்ட் பதிவுகளும் வைரலாகி வருகின்றன

மேலும் சாக்‌ஷி அகர்வால் தற்போது ’சிண்ட்ரெல்லா’, ‘டெடி’, ‘ஆயிரம் ஜென்மங்கள்’ ‘அரண்மனை 3’, மற்றும் ‘புரவி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இதில் ‘டெடி’ விரைவில் ரிலீஸாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

துருவ் விக்ரமா இது? அப்பாவையே தூக்கி சாப்பிட்டுவிடுவார் போல?

தமிழ் சினிமாவில் ஒரு கேரக்டருக்காக மிகவும் மெனக்கெட்டு அந்த கேரக்டராகவே மாறும் நடிகர்கள் மிகச் சிலர்தான் உள்ளனர். அந்த வகையில் கமல்ஹாசனை அடுத்து விக்ரம் தான் நடிப்பின் சிகரம்

உங்களை பற்றி சொல்ல இந்த ஒரு பதிவு போதாது: காஜல் அகர்வால் நெகிழ்ச்சிக்கு யார் காரணம்?

சமீபத்தில் கௌதம் என்ற மும்பை தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் கணவருடன் மாலத்தீவுக்கு தேனிலவு சென்றார் என்பதும் அங்கிருந்து கொண்டு அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்

'சூரரை போற்று' திரைப்படத்திற்கு கிடைத்த சர்வதேச கெளரவம்!

சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவான 'சூரரை போற்று' திரைப்படம் சமீபத்தில் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளி வந்தது என்பதும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது

கமல் இப்படி சொல்வார்ன்னு எதிர்பார்க்கவே இல்லை: ரம்யா அதிர்ச்சி

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் ரம்யா கேப்டனாக இருந்த நிலையில் அவருடைய கேப்டன்சி எப்படி இருந்தது என கமல்ஹாசன் மற்ற ஹவுஸ்மேட்ஸ்களிடம் கேட்க அதற்கு பாலாஜி,

கோழி-நரி டாஸ்க்: அர்ச்சனாவை மறைமுகமாக கிண்டல் செய்த கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கோழிப்பண்ணை டாஸ்க்கின் பஞ்சாயத்து இன்னும் முடிந்தபாடில்லை. இன்றைய இரண்டாம் புரமோவில் மீண்டும் கோழி-நரி டாஸ்க்கின் பஞ்சாயத்து வருகிறது.