close
Choose your channels

துருவ் விக்ரமா இது? அப்பாவையே தூக்கி சாப்பிட்டுவிடுவார் போல?

Sunday, December 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் ஒரு கேரக்டருக்காக மிகவும் மெனக்கெட்டு அந்த கேரக்டராகவே மாறும் நடிகர்கள் மிகச் சிலர்தான் உள்ளனர். அந்த வகையில் கமல்ஹாசனை அடுத்து விக்ரம் தான் நடிப்பின் சிகரம் என்றும் கேரக்டராகவே மாறும் நடிகர் என்றும் சொல்லலாம்

இந்த நிலையில் ’தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்’ என்பது போல் விக்ரம் ஒரு கேரக்டருக்காக எந்த அளவு மெனக்கிடுகிறாரோ அதைவிட அதிகமாக துருவ் விக்ரம் உள்ளார் என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியமளித்தது

சமீபத்தில் துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் அடுத்த படத்திற்காக வேற லெவலில் தனது உடலை தயார் செய்து வைத்துள்ளார் என்பது தெரிய வருகிறது. இதனை அடுத்து அவருக்கு ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

துருவ் விக்ரம் தனது தந்தை விக்ரமுடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த திரைப்படத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாகவும் விக்ரம் வில்லனாகவும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என்று கூறப்படும் நிலையில் இந்த படத்திற்காகத்தான் துருவ் விக்ரம் தன்னை இந்த அளவுக்கு தயார் செய்துள்ளதை இன்ஸ்டாகிராம் புகைப்படம் மூலம் பதிவு செய்துள்ளார்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.