தேவிஸ்ரீ பிரசாத்துக்கு ஜோடி சேரும் விஜய்,தனுஷ் நாயகி

  • IndiaGlitz, [Sunday,January 10 2016]

விஜய் நடித்த 'புலி' உள்பட ஏராளமான தமிழ், தெலுங்கு படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் பாணியில் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


தேவிஸ்ரீ பிரசாத் ஹீரோவாக நடிக்கவுள்ள படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். சுகுமார் இயக்கவுள்ள இந்த படத்தில் தேவிஸ்ரீ பிரசாத்துக்கு ஜோடியாக நடிக்க நடிகை சார்மி உள்பட பலர் பரிசீலிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் நடிகை சமந்தா, இந்த படத்தின் நாயகியாக நடிப்பார் என கூறப்படுகிறது.

விஜய்யுடன் 'கத்தி', 'தெறி' ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ள சமந்தா தற்போது மகேஷ்பாபுவுடன் 'பிரமோத்சவம்' படத்தில் நடித்து வருகிறார். மேலும் விரைவில் தனுஷூடன் 'வடசென்னை' படப்பிடிப்புலும் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

முடிவுக்கு வந்தது ஜீவாவின் 'போக்கிரி ராஜா'

கோலிவுட்டின் இளையதலைமுறை நடிகர்களில் முக்கிய நடிகராக விளங்கி வரும் ஜீவா, 'யான்' படத்தில் சிறிது சறுக்கினாலும் தற்போது...

பிரசாந்த்தின் 'சாஹசம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல நடிகர் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்கு பின்னர் 'சாஹசம்'' என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ...

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது.

கோலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது இயக்கி வரும் 'அகிரா' என்ற பாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.....

இயக்குனருக்கு கார், இசையமைப்பாளருக்கு தங்க செயின். சூர்யாவின் தாராளம்

சூர்யா, அமலாபால், பிந்துமாதவி நடித்த 'பசங்க 2' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து இந்த படத்தின் இயக்குனர் பாண்டியராஜூக்கு நடிகர் சூர்யா கார் ஒன்றை பரிசாக அளித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தில் இசையமைப்பாளராக பணிபுரிந்த அரோல் கரோலியும் சூர்யாவிடம் இருந்து தற்போது பரிசு பெற்றுள்ளார்....

'விசாரணை' படத்தின் புதிய ரிலீஸ் தேதி

தனுஷ், வெற்றிமாறன் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விசாரணை' திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே பல சர்வதேச விருதுகளை பெற்றுள்ள நிலையில் இந்த படம் வரும் 29ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ...