close
Choose your channels

முடிவுக்கு வந்தது ஜீவாவின் 'போக்கிரி ராஜா'

Sunday, January 10, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட்டின் இளையதலைமுறை நடிகர்களில் முக்கிய நடிகராக விளங்கி வரும் ஜீவா, 'யான்' படத்தில் சிறிது சறுக்கினாலும் தற்போது முழுவேகத்தில் முன்னணி இடத்தை பிடிக்கும் முயற்சியாக ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடித்து வருகிறார். நயன்தாராவுடன் 'திருநாள்', ஹன்சிகாவுடன் 'போக்கிரி ராஜா', காஜல் அகர்வாலுடன் 'கவலைவேண்டாம்' மற்றும் ஜெமினிகணேசன் ஆகிய படங்களில் ஜீவா நடித்து வருகிறார். இந்த நான்கு படங்களும் இவ்வருடம் ஜீவாவுக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்நிலையில் ஜீவா நடித்து வந்த 'போக்கிரி ராஜா' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இன்னும் சில நாட்களில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் துவங்கும் என்றும் கூறப்படுகிறது.

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ள இந்த படத்தில் ஜீவா, ஹன்சிகா, சிபிராஜ், மனோபாலா, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி.இமானின் இசையில், ஆஞ்சியின் ஒளிப்பதிவில், சாபு ஜோசப்பின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.