close
Choose your channels

பிரசாந்த்தின் 'சாஹசம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Sunday, January 10, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்கு பின்னர் 'சாஹசம்'' என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


''சாஹசம்'' திரைப்படம் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் இணையதளங்களில் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை பிரபல நிறுவனம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்கிறது. இதே தேதியில்தால் வெற்றிமாறனின் விசாரணை' திரைப்படம் ரிலீஸ் ஆகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

பிரசாந்த், அமந்தா, அபிதா, நாசர், தம்பிராமையா, தேவதர்ஷினி, எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரித்துள்ள இந்த படத்தை அருண்ராஜ் வர்மா என்பவர் இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.