close
Choose your channels

தியானமும் உண்டு.. டூ பீஸ் குளியலும் உண்டு.. சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

Saturday, February 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தா மலேசியாவில் டூ பீஸ் உடையணிந்து குளிக்கும் புகைப்படத்தையும் குளித்த பின் தியானம் செய்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை சமந்தா கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் தற்போது முழு அளவில் குணமாகி மீண்டும் திரை உலகிற்கு வந்துள்ளார். அவர் நடித்து வரும் வெப் தொடர் ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமந்தா சில மணி நேரங்களுக்கு முன்னர் தனது சமூக வலைதளத்தில் மலேசியாவில் உள்ள ஒரு சுற்றுலா பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதில் அவர் இயற்கை எழில் கொஞ்சும் ஒரு இடத்தில் டூ பீஸ் உடையில் குளித்து கொண்டிருப்பது போன்றும் அதன் பின்னர் தியானம் செய்வது மற்றும் அந்த பகுதியில் உள்ள அழகிய காட்சிகளின் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார்.

முதல்முறையாக சமந்தாவை டூ பீஸ் நீச்சல் உடையில் பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.