close
Choose your channels

கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்தில் சமுத்திரக்கனி! என்ன கேரக்டர்?

Friday, August 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கரின் பிரமாண்டமான இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் 'இந்தியன் 2' திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் ரகுல் ப்ரித்திசிங் கலந்து கொண்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் நேற்று முதல் 'இந்தியன் 2' படப்பிடிப்பில் பிரியா பவானிசங்கரும் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் கமல்ஹாசனும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்

இந்த நிலையில் 'இந்தியன் 2' படத்தில் சமீபத்தில் ரகுல் ப்ரித்திசிங், பிரியா பவானிசங்கர், வித்யூத் ஜாம்வால், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் இணைந்த நிலையில் தற்போது நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனியும் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது

சமுத்திரக்கனி இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் தோன்றுவதாகவும், அவர் இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய காட்சிகளில் இளம்வயது கமல்ஹாசனுக்கு நண்பனாக நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் சமுத்திரக்கனியின் வரவு மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.