சந்தானம் பட நாயகிக்கு கொரோனா தொற்று: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கோரிக்கை!

  • IndiaGlitz, [Tuesday,March 30 2021]

சந்தானம் நடித்த படத்தில் நாயகியாக நடித்த நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

சந்தானம் நடித்த ’சக்க போடு போடு ராஜா’ என்ற திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் வைபவி சாண்டில்யா. இவர் அந்த படத்தை அடுத்து ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ ’கேப்மாரி’ ’சர்வர் சுந்தரம்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஒரு சில கன்னட படங்களிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை வைபவி சாண்டில்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தி கொண்டு மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தன்னிடம் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறும், மேலும் பொதுமக்கள் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க பாதுகாப்புடன் இருக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் அவரது ரசிகர்கள் அவர் விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


 

More News

'கர்ணன்' படத்தின் அடுத்த சூப்பர் அப்டேட்டை அறிவித்த தயாரிப்பாளர் தாணு!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிய 'கர்ணன்' திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை தயாரிப்பாளர் தாணு அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில்

தனுஷின் 'நானே வருவேன்' படப்பிடிப்பு எப்போது? செல்வராகவன் தகவல்

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக உள்ள 'நானே வருவேன்' என்ற படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது என்பதும் கடந்த பொங்கல் தினத்தில்

ஆ ராசாவின் சர்ச்சை பேச்சு: கண்கலங்கிய முதல்வருக்கு ஆறுதல் கூறிய தமிழ் நடிகை!

சமீபத்தில் திமுக எம்பி ஆ ராசா அவர்கள் முதல்வரின் தாயார் குறித்தும், முதல்வரின் பிறப்பு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பெரும் பிரச்சனை எழுந்தது.

அதே மாலத்தீவு, அதே நயன்தாரா பாடல்: ஷிவானிக்கு போட்டியாக ஜனனி ஐயரின் வீடியோ!

பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் சமீபத்தில் மாலத்தீவு சென்றார் என்பதும் அங்கிருந்து கொண்டே அவர் கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்தார் என்பதையும் பார்த்தோம்

தல அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் மோகன்லால்: ஆச்சரியமான தகவல்

தல அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைய உள்ள நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன.