close
Choose your channels

தல அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் மோகன்லால்: ஆச்சரியமான தகவல்

Tuesday, March 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்துவரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைய உள்ள நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன. அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து இயக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. பரோஸ் - நிதி காக்கும் பூதம்- 3டி என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை மோகன்லால் நடித்து இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் இசையமைப்பாளராக 15 வயது தமிழக சிறுவன் லிடியன் நாதஸ்வரம் அறிமுகமாகிறார் என்பதும் இந்த படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க அஜீத் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் மோகன்லால் விரும்பி கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் இந்த படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தில் அஜித் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறாரா? அல்லது படம் முழுவதும் வரும் முக்கிய கேரக்டரா? என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.