close
Choose your channels

கவுண்டமணியின் காமெடி வசனமான டைட்டில்.. சந்தானம் அடுத்த படத்தின் அறிவிப்பு!

Monday, January 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சந்தானம் நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியான சற்றுமுன் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் சந்தானம் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக நேற்று அறிவித்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு ’வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி என்பது கவுண்டமணியின் பிரபலமான காமெடி வசனம் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் யோகி என்பவரின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைக்க உள்ளார். தீபக் ஒளிப்பதிவில் சிவா நந்தீஸ்வரன் படத்தொகுப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சந்தானம் நடித்த ’கிக்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment