close
Choose your channels

மக்கள் எல்லாரும் அவனை கூகுள்ன்னு கூப்பிடுவாங்க: 'சந்தானம்' அடுத்த பட மோஷன் போஸ்டர்

Wednesday, March 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’மேயாத மான்’ மற்றும் ’ஆடை’ படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் சந்தானம் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகும் என்றும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் அந்த மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது என்பதும் இந்த படத்திற்கு ‘குலுகுலு’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மோஷன் போஸ்டரில் ஒரு சில வசனங்களும் உள்ளன. அதில், ‘அவன் ஊர், பெயர் யாருக்கும் தெரியாது, நாடு நாடாக சுற்றி இருக்கிறான். 13 மொழிகளை கற்று இருக்கிறான், அவன் அம்மா தப்பு தப்பாக கிளாஸ் எடுத்த அரைகுறை ஆங்கிலத்தை அவன் எப்போதும் மறக்கவில்லை. பொது சேவை செய்கிறேன் என்று சொல்வான், எதைப் பற்றிக் கேட்டாலும் தெளிவாக சொல்வான். அதனால் அவனை மக்கள் எல்லோரும் கூகுள் என்று கூப்பிடுவார்கள். அப்படி கூப்பிடும் போதெல்லாம் அவன் காதில் ‘குலுகுலு’ என கேட்கும்’ என்ற வசனம் மோஷன் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது .

சந்தானம், அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, மரியம் ஜார்ஜ் உள்பட பலர் நடித்த இந்த திரைப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment