close
Choose your channels

ஒரு கொலைகாரனை தெரிஞ்சுகிடனும்னா, அவனோட கொலையை படிக்கணும்: 'போர் தொழில்' டிரைலர்..!

Wednesday, May 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் உருவான ’போர் தொழில்’ என்ற திரைப்படம் வரும் ஜூன் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சுமார் மூன்று நிமிடங்கள் உள்ள இந்த ட்ரெய்லரில் இளம் பெண்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர். கொலை செய்யப்பட்ட பெண்கள் அனைவரும் ஒரே மாதிரியாக கொலை செய்யப்பட்டு இருப்பதை அடுத்து ஒரு சைக்கோ கொலைகாரன் தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் கொலைகாரனை வேட்டையாடுகின்றனர்.

சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் ஆகிய இருவரும் காவல்துறை அதிகாரிகளாக நடித்திருக்கும் இந்த படத்தில் அவர்கள் கொலைகாரர்களை கண்டுபிடித்தார்களா? கொலைக்கான காரணம் என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை என தெரிய வருகிறது.

சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை விக்னேஷ் ராஜா என்பவர் இயக்கியுள்ளார். ஜாக்ஸ் பிஜாய் இசையில் உருவான இந்த படம் திகில் பட ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட இடைவேளைக்கு பின்னர் சரத்குமாரை கம்பீரமான ஒரு காவல்துறை அதிகாரி கேரக்டரில் பார்ப்பது ரசிகர்களுக்கு திருப்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.