'சர்கார்' மற்றும் 'திமிறு பிடிச்சவன்' படங்களின் ஒற்றுமைகள்

  • IndiaGlitz, [Saturday,October 27 2018]

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது என்பதும் இந்த படத்திற்கு சென்சாரில் 'யூஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான 'திமிறு பிடிச்சவன் திரைப்படமும் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கும் சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். யூஏ மற்றும் தீபாவளி வெளியீடு ஆகிய இரண்டு அம்சங்களும் சர்கார் மற்றும் திமிறு பிடிச்சவன் படங்களின் ஒற்றுமைகள் ஆகும்.

விஜய் ஆண்டனி, நிவேதா பேத்ராஜ், டேனியல் பாலாஜி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை கணேஷா இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அவரே இசையமைத்து படத்தொகுப்பும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரிச்சர்ட் நாதன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் ரன்னிங் டைம் 166 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 46 நிமிடங்கள் ஆகும்.

More News

முதல்வரை கருணாஸ் தாக்கி பேசிய வழக்கு: நீதிமன்றம் புதிய உத்தரவு

தமிழக முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை தவறாக பேசியதாக காமெடி நடிகரும் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் மீது தொடர்ந்த வழக்கில்

யோகிபாபுவின் காதல் பிரச்சனையை தீர்த்து வைத்த ஜோதிகா

ஜோதிகா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காற்றின் மொழி' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருந்தபோதும் சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கின்றது.

'ஜீனியஸ்' படத்தில் விஜய் நடிக்க மறுத்தது ஏன்? சுசீந்திரன்

சுசீந்திரன் இயககத்தில் அறிமுக நாயகன் ரோஷன் நடித்த 'ஜீனியஸ்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

நடுரோட்டில் ரூ.2000 கோடி: மக்கள் குவிந்ததால் சென்னையில் பரபரப்பு

ரூ.2000 கோடி ஏற்றி கொண்டு வந்த கண்டெய்னர் லாரி ஒன்று சென்னையில் நடுரோட்டில் திடீரென பழுதாகி நின்றதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கசப்பான உண்மை குறித்து ரஜினிகாந்த் அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தனது ரசிகர்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.