close
Choose your channels

யோகிபாபுவின் காதல் பிரச்சனையை தீர்த்து வைத்த ஜோதிகா

Friday, October 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜோதிகா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காற்றின் மொழி' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருந்தபோதும் சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கின்றது.

இந்த நிலையில் இந்த படத்தில் சிம்பு ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக ஏற்கனவே நாம் தெரிந்ததே. தற்போது கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபுவும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளது தெரிய வந்துள்ளது.

ரேடியோ ஆர்ஜேவாக நடித்திருக்கும் ஜோதிகாவிடம் பலரும் போன் செய்து தங்களின் பிரச்சனை குறித்த தீர்வுகளை கேட்கும் காட்சிகள் இந்த படத்தில் உண்டு. அந்த வகையில் யோகிபாபுவும் ஜோதிகாவிற்கு போன் செய்து தனது காதல் பிரச்சனையை கூறுவதாகவும், அதற்கு ஜோதிகா ஒரு தீர்வை கூறுவது போன்ற காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. ஒரே நாளில் யோகிபாபு இந்த காட்சியில் நடித்துள்ளதாகவும், இந்த காட்சி காமெடி ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.