close
Choose your channels

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்த பிரபல ஹீரோ: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Saturday, September 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகயிருக்கும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் அருண்மாதேஸ்வரன் தற்போது இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு குறித்த பணிகளில் உள்ளார் என்று கூறப்பட்ட நிலையில் இந்த படத்தில் பிரபல தெலுங்கு ஹீரோவும், லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படத்தின் ஹீரோக்களில் ஒருவருமான சந்தீப் கிஷான் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் கசிந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்றுமுன் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் நடிகர் சந்தீப் கிஷான் இந்த படத்தில் இணைந்து இருப்பதை உறுதி செய்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் ’சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்த ஜான் கொகைன் நடிக்க உள்ளதாகவும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

‘கேப்டன் மில்லர்’ படத்தில் இணையும் நட்சத்திரங்களைப் பார்க்கும் போதே இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷின் இசையில் உருவாகும் இந்தப் படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் பான் - இந்தியா திரைப்படமாக உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment