close
Choose your channels

சனாதனத்திற்கு ஆதரவு தெரிவித்த கஸ்தூரி: சத்யராஜ் மகள் திவ்யா கடும் விமர்சனம்..!

Thursday, September 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சனாதனத்திற்கு ஆதரவாக பேசிய நடிகை கஸ்தூரியை சத்யராஜ் மகள் திவ்யா கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஒரு ஊட்டச்சத்து நிபுணர் என்பதும் சமூக ஆர்வலரான இவர் 'மில்மதி இயக்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பதும் தெரிந்ததே. மேலும் திவ்யா சத்யராஜ் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கும் சமூக பணியை செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது



இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை கஸ்தூரி தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் சனாதனத்திற்கு ஆதரவாக பேசியிருந்தார். இதனை அடுத்து கஸ்தூரிக்கு திவ்யா சத்யராஜ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்

இதுகுறித்து திவ்யா சத்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’கஸ்தூரி அவர்கள் சனாதனம் குறித்து அளித்த பேட்டியை பார்த்தேன், என் கருத்துப்படி அவர் ஒரு மத வெறியராக இருக்கலாம் என்று தோன்றுகிறது. சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளுக்கு எதிரானது என்பதால் நான் சனாதனத்தை எதிர்க்கிறேன்’ என்று கூறியுள்ளார். அவருடைய இந்த விமர்சனம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos