அரசியல் கூட்டணியால் 'கண்ணே கலைமானே' காட்சி ரத்து!

  • IndiaGlitz, [Wednesday,February 20 2019]

பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக இணைந்துவிட்ட நிலையில் தேமுதிகவை இணைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதேபோல் திமுக கூட்டணி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் சீனுராமசாமி தன்னுடைய ஒவ்வொரு படத்தின் ரிலீசுக்கு முன்னரும் அனைத்து கட்சி தலைவர்களுக்காக ஒரு சிறப்பு காட்சியை திரையிடுவது வழக்கம். அவரது முந்தைய படமான 'தர்மதுரை' படத்தை பல அரசியல் கட்சி தலைவர்கள் பார்த்து பாராட்டினர். ஆனால் வரும் 22ஆம் தேதி ரிலீஸாகவுள்ள 'கண்ணே கலைமானே' படத்திற்கு அரசியல் தலைவர்களுகான சிறப்புக்காட்சியை இயக்குனர் ரத்து செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

“என் எல்லாப் படங்களையும் சர்வக்கட்சித் தலைவர்களுக்கு சிறப்புக் காட்சியாகத் திரையிடல் செய்வதுண்டு. இம்முறை உதயநிதி, தமன்னா நடிப்பில் வரும் 22-ம் தேதி வெளியாகும் ‘கண்ணே கலைமானே’ படத்துக்கு அவ்வாய்ப்பில்லை. கூட்டணிகள் தீர்மானிக்கின்றன, ப்ரிவியூ காட்சிகளையும்” என சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
 

More News

ஜூனியர் எஞ்சினியர் தேர்வில் முதலிடம் பெற்ற சன்னிலியோன்!

பீகார் மாநில அரசு நடத்திய ஜூனியர் எஞ்சினியர் தேர்வில் சன்னிலியோன் தேர்ச்சி பெற்றது மட்டுமின்றி மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி அடைந்துள்ளார். அவர் பெற்ற மதிப்பெண் 98.5% ஆகும்.

இயக்குனர் கொடுத்த பட்டத்தை வாங்க மறுத்த உதயநிதி!

கோலிவுட் திரையுலகம் உள்பட அனைத்து திரையுலகிலும் பிரபல நடிகர்கள் தங்களுடைய பெயருக்கு முன் பட்டம் போட்டு கொள்வதை வாடிக்கையாக்கி வருகின்றனர்.

'தளபதி 63' படத்தில் நாஞ்சில் சம்பத்?

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மீண்டும் தள்ளிப்போன 'பூமராங்' ரிலீஸ்

அதர்வா, மேகா ஆகாஷ் நடிப்பில் இயக்குனர் கண்ணன் இயக்கிய 'பூமராங்' திரைப்படம் கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

'சதுரங்க வேட்டை' பாணியில் ரூ.42 கோடி மோசடி செய்த சென்னை ஓட்டல் முதலாளி!

'ஒருத்தனை ஏமாத்தனும்ன்னா அவனது ஆசையை தூண்டவேண்டும்' என்ற கதைதான் 'சதுரங்க வேட்டை' திரைப்படம். இந்த திரைப்படத்தின் பாணியில் சென்னையில் ஒரு பெரும் மோசடி நடந்துள்ளது