close
Choose your channels

மீண்டும் தள்ளிப்போன 'பூமராங்' ரிலீஸ்

Wednesday, February 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதர்வா, மேகா ஆகாஷ் நடிப்பில் இயக்குனர் கண்ணன் இயக்கிய 'பூமராங்' திரைப்படம் கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி கடந்த ஆண்டு தீபாவளி, கிறிஸ்துமஸ் என பலமுறை அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிப்போய்க்கொண்டே இருந்த நிலையில் மார்ச் 1ஆம் தேதி உறுதியாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு புரமோஷன் பணிகளும் தொடங்கப்பட்டது

இந்த நிலையில் பிப்ரவரி 22ஆம் தேதி ரிலீஸாக வேண்டிய ஓவியாவின் '90ml' திரைப்படம் திடீரென மார்ச் 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. ஏற்கனவே மார்ச் 1ஆம் தேதி அருண்விஜய்யின் 'தடம்', 'சேரனின் 'திருமணம்', சாருஹாசனின் தாதா87' ஆகிய படங்கள் வெளியாவதால் 'பூமராங்' படத்திற்கு நல்ல தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து இந்த படத்தின் ரிலீஸ் மார்ச் 8ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, உபென் பட்டேல், சதீஷ், ஆர்ஜே பாலாஜி, சுஹாசினி, மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ராதான் இசையமைத்துள்ளார். பிரசன்னகுமார் ஒளிப்பதிவில், சுரேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கண்ணன் தயாரித்து இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.