close
Choose your channels

காஜல் அகர்வாலுக்காக பாட்டு பாடிய 7 இசையமைப்பாளர்கள்!

Wednesday, November 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை காஜல் அகர்வால் நடித்த ‘கோஸ்டி’ என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை 7 இசையமைப்பாளர்கள் பாடி உள்ளனர் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல நடிகை காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘கோஸ்டி’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’விடுங்கடா விடுங்கடா’ என்ற சிங்கிள் பாடல் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சாம் சிஎஸ் இசையில் உருவான இந்த பாடலை இசையமைப்பாளர்களான சந்தோஷ் நாராயணன், லியோன் ஜேம்ஸ், விவேக்-மெர்வின், ஹரிசரண், சத்ய பிரகாஷ், குணா, பிரேம்ஜி மற்றும் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார்.

காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் யோகி பாபு, கேஎஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, தங்கத்துரை, ஜெகன், ஊர்வசி, ஆடுகளம் நரேன் ,மனோபாலா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கல்யாண் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ‘குலேபகாவலி’ மற்றும் ‘ஜாக்பாட்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.