விஜய்யின் 'லியோ' படத்தின் மாஸ் அப்டேட்.. படக்குழு வெளியிட்ட வீடியோ..!

  • IndiaGlitz, [Saturday,March 11 2023]

தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் ‘லியோ’ படத்தின் மாஸ் அப்டேட் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் நடந்த நிலையில் தற்போது காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.

மைனஸ் டிகிரி செல்சியஸ் குளிர் இருந்தாலும் படக்குழுவினர் லோகேஷ் கனகராஜுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ஒவ்வொருவராக தங்களுடைய பகுதியின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பி வருகின்றனர். தற்போது சஞ்சய்தத் காஷ்மீர் படபிடிப்பில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வரும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் சற்றுமுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் சஞ்சய்தத், ‘லியோ’ படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் காட்சி உள்ளது. விஜய், சஞ்சய்தத்தை கட்டிப்பிடித்து வரவேற்பது உள்பட மாஸ் காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளதால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

More News

'அவர் பாட்ஷா மாதிரி, அவருக்கு இன்னொரு முகம் இருக்கு: தமிழக அமைச்சர் குறித்து ரஜினிகாந்த்..!

அவர் பாட்ஷா மாதிரி, அவருக்கு இன்னொரு முகம் இருக்குது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழக அமைச்சர் ஒருவர் குறித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஜெயம் ரவியின் 'அகிலன்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? கோலிவுட் திரையுலகினர் ஆச்சரியம்..!

 ஜெயம் ரவி நடித்த 'அகிலன்' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியான நிலையில் இந்த படத்திற்கு ஏராளமான பாசிட்டிவ் விமர்சனங்களும் ஒரு சில கலவையான விமர்சனங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

'கொடுத்து வச்சது அந்த ரோஸ் தான்: ரம்யா பாண்டியனின் வேற லெவல் போட்டோஷூட்..!

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக அவர் பூக்களை கைகளில் கைகளில் வைத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இந்த போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ஜாலியான கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன 

திருமண நாளில் கணவருடன் செம போஸ்.. நடிகை ரீமா சென் பகிர்ந்த புகைப்படம்..!

நடிகை ரீமாசென் இன்று தனது கணவருடன் திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில் கணவருடன் இருக்கும் செம ரொமான்ஸ் போஸ் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில்

ஆசிய திரைப்பட விழாவில்  'பொன்னியின் செல்வன்' படக்குழு: விருதுகளை குவிக்குமா?

நாளை அதாவது மார்ச் 12ஆம் தேதி ஹாங்காங்கில் ஆசிய திரைப்பட விருது விழா நடைபெற உள்ளதை அடுத்து இந்த விழாவில் பங்கேற்க 'பொன்னின் செல்வன்' படக்குழு ஹாங்காங் செல்ல உள்ளனர்.