close
Choose your channels

சன் டிவி சீரியலில் இருந்து திடீரென விலகிய ஷபானா. கர்ப்பம் காரணமா? அவரே அளித்த பதில்..!

Thursday, April 11, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜீ டிவியில் ஒளிபரப்பான ’செம்பருத்தி’ சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஷபானா தற்போது சன் டிவியில் பிரபலமான சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென அந்த சீரியலில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இதனையடுத்து அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் அதனால் தான் சீரியலில் இருந்து விலகியதாகவும் கூறப்பட்டதோடு அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஜீ தமிழ் சீரியலில் நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பான ’செம்பருத்தி’ என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஷபானா. அதன்பிறகு அந்த சீரியல் முடிந்தவுடன் சன் டிவியில் ஒளிபரப்பான ’மிஸ்டர் மனைவி’ என்ற சீரியலில் ஷபானா நடித்தார். ’செம்பருத்தி’ போலவே இந்த சீரியலும் மிகப்பெரிய அளவில் பிரபலமானது.

இந்நிலையில் இந்த சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக ஷபானா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ‘மிஸ்டர் மனைவி’ சீரியலில் இருந்து விலகுவது தனக்கு மிகுந்த வருத்தமாக இருந்தாலும் ஒரு சில தனிப்பட்ட காரணங்களால் இந்த சீரியலில் இருந்து நான் விலகுகிறேன். இந்த சீரியலில் அஞ்சலி என்ற கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்தது என்றும் இந்த சீரியலில் அஞ்சலி கேரக்டரில் நடிக்க இருக்கும் நடிகைக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து ஷபானா ’மிஸ்டர் மனைவி’ சீரியலில் இருந்து விலகியதற்கு அவர் கர்ப்பமாக இருப்பது தான் காரணம் என்று அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து அவர் இது குறித்து மேலும் ஒரு பதிவில், ‘நான் கர்ப்பமாக இல்லை, இதற்கு முன்பு கூட நான் கர்ப்பமாக இருப்பதாக பலர் வாழ்த்து கூறினார்கள், நான் சீரியலில் இருந்து விலகியதற்கு கர்ப்பம் காரணம் இல்லை, ஒரு புத்தம் புதிய புரொஜக்ட் ஒன்றில் நல்ல கேரக்டருடன் உங்களை மீண்டும் விரைவில் சந்திக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஷபானா ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியிருப்பதாகவும் அதனால் தான் அவர் இந்த சீரியலில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment