மணிமேகலையை நேரில் சென்று பார்த்த ஷகிலா: வைரல் புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி எதிர்பாராத வகையில் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ள நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள்ள குக்’கள் மற்றும் கோமாளிகள் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் நான்ஸ்டாப் காமெடி செய்பவர்களில் ஒருவரான மணிமேகலை சமீபத்தில் சிறு விபத்தில் சிக்கினார். அவரது காலில் சுடுதண்ணீர் கொட்டிவிட்டதால் லேசான காயம் அடைந்ததாகவும், அதனால் இரண்டு வாரங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார் என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து மணிமேகலை தனது இன்ஸ்டாவிலும் கூறியிருந்தார்

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஷகிலாவுக்கு மணிமேகலை ஓரிருமுறை கோமாளியாக இருந்துள்ளார். ஷகிலா மணிமேகலையை ஒரு சில நேரங்களில் திட்டினாலும் அவரை தனது மகள் என்றும் என் குழந்தை என்றும் அன்புடன் இந்த நிகழ்ச்சியின்போது கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மணிமேகலைக்கு சிறிய விபத்து ஏற்பட்டதை கேள்விப்பட்டதும் அவருடைய வீட்டிற்கே நேரடியாக சென்று ஷகிலா நலம் விசாரித்துள்ளார். மணிமேகலையை கட்டி அணைத்து கொண்ட ஷகிலாவின் புகைப்படம் மணிமேகலையின் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது

இதில் மணிமேகலை கூறியதாவது: என்னுடைய ஷகிலா அம்மா என்னை நேரில் வந்து பார்த்து சில பாசிட்டிவ் வார்த்தைகள் கூறினார். அவர் கூறிய பாசிட்டிவ் வார்த்தைகள் மிகவும் தெம்பாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

More News

விஜய்சேதுபதி படத்தில் இணைந்த சிம்பு: ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் சிம்பு மிகச்சிறந்த நடிகர் மட்டுமின்றி மிகச் சிறந்த பாடகர் என்பதும் அவர், தான் நடிக்கும் படங்களில் மட்டுமின்றி பிற நடிகர்களின் படங்களிலும் அவ்வப்போது பாடி வருகிறார் என்பதும் தெரிந்ததே

இந்திய திரைப்பட தயாரிப்பில் இறங்கும் அமேசான் பிரைம்! முதல் படத்தின் ஹீரோ அக்சயகுமார்!

அமேசான் ப்ரைம் இப்போது இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பிலும் பங்கேற்கிறது. அக்ஷய் குமார் நடிக்கும் ராம் சேது திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராக உருவெடுக்கிறது.

நடிகர் கமல்ஹாசன் கட்சி-பொருளாளர் வீட்டில் அதிரடி ரெய்டு!

நடிகர் கமல்ஹாசன் தலைமையேற்று நடத்தி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளராகத் தொழிலதிபர் சந்திரசேகரன் செயல்பட்டு வருகிறார்.

குலுமணாலியில் லெஜண்ட் சரவணன்: வைரல் புகைப்படங்கள்!

பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் தற்போது ஒரு தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் ரூபாய் 200 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த திரைப்படம் பிரம்மாண்டமான படமாக இருக்கும்

அவர் ஹீரோவா? எதிர்க்கட்சி தலைவரை விமர்சித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் சட்டச்சபை தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது சூடுபிடித்து இருக்கிறது. இத்தேர்தலில் அதிமுக-பாமக-பாஜக மெகா கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்திக்க உள்ளது.