close
Choose your channels

மணிமேகலையை நேரில் சென்று பார்த்த ஷகிலா: வைரல் புகைப்படம்!

Thursday, March 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி எதிர்பாராத வகையில் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ள நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள்ள குக்’கள் மற்றும் கோமாளிகள் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் நான்ஸ்டாப் காமெடி செய்பவர்களில் ஒருவரான மணிமேகலை சமீபத்தில் சிறு விபத்தில் சிக்கினார். அவரது காலில் சுடுதண்ணீர் கொட்டிவிட்டதால் லேசான காயம் அடைந்ததாகவும், அதனால் இரண்டு வாரங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார் என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து மணிமேகலை தனது இன்ஸ்டாவிலும் கூறியிருந்தார்

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஷகிலாவுக்கு மணிமேகலை ஓரிருமுறை கோமாளியாக இருந்துள்ளார். ஷகிலா மணிமேகலையை ஒரு சில நேரங்களில் திட்டினாலும் அவரை தனது மகள் என்றும் என் குழந்தை என்றும் அன்புடன் இந்த நிகழ்ச்சியின்போது கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மணிமேகலைக்கு சிறிய விபத்து ஏற்பட்டதை கேள்விப்பட்டதும் அவருடைய வீட்டிற்கே நேரடியாக சென்று ஷகிலா நலம் விசாரித்துள்ளார். மணிமேகலையை கட்டி அணைத்து கொண்ட ஷகிலாவின் புகைப்படம் மணிமேகலையின் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது

இதில் மணிமேகலை கூறியதாவது: என்னுடைய ஷகிலா அம்மா என்னை நேரில் வந்து பார்த்து சில பாசிட்டிவ் வார்த்தைகள் கூறினார். அவர் கூறிய பாசிட்டிவ் வார்த்தைகள் மிகவும் தெம்பாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.