close
Choose your channels

இந்திய திரைப்பட தயாரிப்பில் இறங்கும் அமேசான் பிரைம்! முதல் படத்தின் ஹீரோ அக்சயகுமார்!

Thursday, March 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமேசான் ப்ரைம் இப்போது இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பிலும் பங்கேற்கிறது. அக்ஷய் குமார் நடிக்கும் ராம் சேது திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராக உருவெடுக்கிறது. இப்பங்கேற்பின் மூலம், இந்தியாவின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தை உலகெங்கும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான மற்றொரு படியில் அமேசான் முன்னெடுத்துப் பயணிக்கிறது

கேப் ஆஃப் குட் பிலிம்ஸ், அபண்டன்டியா என்டர்டெயின்மென்ட், லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் பிரைம் வீடியோ தயாரிப்பில் வெளிவரவுள்ள இந்த அதிரடி-சாகசப் படத்தை அபிஷேக் சர்மா இயக்கி டாக்டர் சந்திரபிரகாஷ் திவேதி கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும், இந்திய சூப்பர் ஸ்டார் அக்‌ஷய் குமார், ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நசரத் பருச்சா ஆகியயோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, அமேசான் ஒரிஜினல் தொடர், அமேசான் ப்ரைம் மியூசிக் மூலம் விளம்பரமில்லாத மியூசிக், இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்புகளின் இலவச விரைவு விநியோகம், முன்கூட்டிய அணுகல், கவர்சிகரமான டீல்கள், ப்ரைம் ரீடிங் உடன் வரம்பற்ற வாசிப்பு மற்றும் ப்ரைம் கேமிங் உடன் மொபைல் கேமிங் உள்ளடக்கம், இவை அனைத்தையும் மாதத்திற்கு ரூ.129 மட்டுமே என்ற கட்டணத்தில், நம்பமுடியாத பிற மதிப்புகளோடு அமேசான் ப்ரைம் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது

இந்தியாவில் தனது செயல்பாடுகளுக்கு மேலும் வலு சேர்ப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, விரைவில் வெளிவரவுள்ள ’ராம் சேது’ இந்தி திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராக, கேப் ஆஃப் குட் பிலிம்ஸ், அபண்டன்டியா என்டர்டெயின்மென்ட் மற்றும் லைக்கா புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் அமேசான் ப்ரைம் வீடியோ கைகோர்த்துள்ளது. அபிஷேக் சர்மா (பர்மாணு, தேரே பின் லேடன்) இயக்கத்தில் டாக்டர் சந்திரபிரகாஷ் திவேதியை (பிருத்விராஜ் சவுகான்) க்ரியேடிவ் புரொடியூசராகக் கொண்டு வெளிவரும் இத் திரைப்படம், இந்திய கலாச்சாரம் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றிய ஒரு கதையை முன்வைக்கும் ஒரு அதிரடி-சாகச நாடகமாகும். இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார், ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நஸ்ரத் பருச்சா ஆகியோருடன் மேலும் பல திறமை வாய்ந்த நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர்.

திரையரங்குகளில் வெளியீட்டைத் தொடர்ந்து, ராம் சேது விரைவில் இந்தியாவிலும் 240-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் மெம்பர்களுக்கும் காணக் கிடைக்கும். விஜய் சுப்பிரமணியம், டைரக்டர் & ஹெட் (கன்டென்ட்), அமேசான் ப்ரைம் இந்தியா கூறுகையில், “அமேசான் ப்ரைம் வீடியோவில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் வாடிக்கையார்களுக்கு முன்னுரிமை என்ற கண்ணோட்டத்தில் எடுக்கப்படுகின்றன. இந்திய மண்ணில் வேரூன்றிய பல கதைகள் பெரும்பாலும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை அடைந்துள்ளன, மேலும் நமது இந்திய பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகின்ற ஒரு திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராக அறிமுகம் ஆவதன் மூலம் முன்னேற்றப் பாதையில் மேலும் ஒரு படி எடுத்து வைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். விக்ரம் மல்ஹோத்ரா மற்றும் அபண்டன்டியா என்டர்டெயின்மென்ட் மற்றும் அக்ஷய் குமார் உடனான எங்கள் ஒத்துழைப்பு இன்றுவரை தனித்துவமானது மற்றும் மிகவும் வெற்றிகரமாக இருந்தது; இந்த புதிய முயற்சி, எங்கள் உறவை மேலும் வலுப்படுத்தும். சீரிய திறன் கொண்ட நடிகர்கள் மற்றும் வரலாற்றில் தனித்துவம் கொண்ட ஒரு கதையுடன், உலகெங்கிலும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களை தொடர்ந்து மகிழ்விப்பதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.” என்றார்.

நடிகர் அக்‌ஷய் குமார் கூறுகையில், “வலிமை, துணிச்சல், அன்பு மற்றும் நமது அற்புதமான நாட்டின் தார்மீக மற்றும் சமூகப் பின்னலை உள்ளடக்கிய தனித்துவமான இந்திய சிறப்பியல்புகளைப் பிரதிபலிக்கும் ராம் சேது திரைப்படதின் கதை எனக்கு ஆர்வத்தையும் ஊக்கத்தையும் அளித்தது. ராம் சேது என்பது கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்காலத் தலைமுறைகளுக்கு இடையிலான ஒரு பாலமாகும். இந்தியப் பாரம்பரியத்தின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியின் கதையை விளக்குவதை, குறிப்பாக இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்வதை நான் எதிர்நோக்குகிறேன், அமேசான் ப்ரைம் வீடியோவுடன் இக்கதை எல்லைகளைக் கடந்து உலகெங்கிலும் உள்ள திரைப்பட ரசிகர்களை அடையும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்." என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.