விஜய் பிறந்த நாளில் அஜித் வீட்டில் என்ன விசேஷம்..? சகோதரிகளின் செம்ம புகைப்படம்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
தளபதி விஜய் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் அவர் நடித்த நடித்து வரும் ’லியோ’ படத்தின் சிங்கிள் பாடல் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் விஜய் பிறந்தநாளின் போது அஜித் தொலைபேசி மூலம் அவருக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவிப்பார் என்று செய்திகள் வெளியான நிலையில் நேற்றும் அவர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருப்பார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சகோதரி ஷாமிலி உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ’தங்கையுடன் கொண்டாட்டம்’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இருவரும் விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போது எடுத்த புகைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் பிறந்தநாளில் அஜித் வீட்டில் அப்படி என்ன கொண்டாட்டமாக இருக்கும்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் மேலும் இந்த புகைப்படத்தின் கமெண்ட்களில் தல எங்க மேடம்? தலயை கேட்டதாக சொல்லுங்கள்? என்று பலர் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments