close
Choose your channels

'தீரன்' குழுவினர்களை திகட்ட திகட்ட பாராட்டிய ஷங்கர்

Sunday, November 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான கார்த்தியின் 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது. ரசிகர்கள், திரையுலகினர் மட்டுமின்றி காவல்துறை அதிகாரிகளும் இந்த படத்தை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர். குறிப்பாக இயக்குனர் வினோத்தின் ஹோம்வொர்க்கை படம் பார்த்தவர்கள் பாராட்டுகின்றனர்

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தை பார்த்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் படக்குழுவினர் அனைவரையும் தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டியுள்ளார். ஒரு மிகச்சிறந்த  விறுவிறுப்பாக போலீஸ் படம் என்றும், ஒவ்வொரு காட்சியும் சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் அளவிற்கு இயக்குனர் வினோத்தின் உழைப்பும், அவர் திரட்டிய விபரங்களும் இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் கார்த்தியின் அபார நடிப்பை பாராட்டிய இயக்குனர் ஷங்கர், இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் கேமிராமேன் உள்பட படத்தின் மொத்த குழுவினர்களையும் திகட்ட திகட்ட பாராட்டியுள்ளார். ஷங்கரின் பாராட்டுக்கு ஜிப்ரான் உள்பட படக்குழுவினர் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.