எந்திரன், எந்திரன் 2ஐ அடுத்து ஷங்கரின் பிரமாண்ட திட்டம்

  • IndiaGlitz, [Monday,October 12 2015]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ஷங்கர் கூட்டணியில் உருவான 'எந்திரன்' படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து 'எந்திரன் 2' படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் 'எந்திரன் 2' திரைப்படம் முழுக்க முழுக்க 3D கேமராவில் படமாக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 2D கேமராவில் எடுக்கப்பட்டு பின்னர் 3Dக்கு படத்தை மாற்றி வந்த நிலையில் முதன்முதலான நேரடியாக 3D கேமராவினால் இந்த படம் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் 'கோச்சடையான்' படத்தின் தொழில்நுட்பமான மோஷன் கேப்ட்சர் தொழில்நுட்பத்திலும் ஒருசில காட்சிகள் எடுக்கப்படவிருப்பதாகவும், இந்த காட்சிகளில் ஒருசிலவற்றை 'எந்திரன் 3' படத்தில் ஷங்கர் உபயோகப்படுத்தவிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே 'எந்திரன் 2' படத்தை தொடர்ந்து 'எந்திரன் 3' படத்தையும் அவர் விரைவில் இயக்குவார் என கூறப்படுகிறது.

இந்தியாவிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இந்த படத்தில், 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என்றும், இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

நடிகர் கார்த்திக் சகோதரர் மதுரையில் திடீர் கைது

அலைகள் ஓய்வதில்லை தொடங்கி சமீபத்தில் வெளிவந்த 'அனேகன்' வரை பல படங்களில் நடித்தவர் நடிகர் கார்த்திக்...

தேசிய விருது பெற்ற இயக்குனருடன் கைகோர்க்கும் கமல்?

கடந்த 1989ஆம் ஆண்டு கமல்ஹாசன், ஜெயராம், திலகன், ஊர்மிளா மற்றும் பலர் நடித்த மலையாள த்ரில் திரைப்படம் 'சாணக்யன்...

'உத்தம வில்லன்' படத்துடன் கனெக்ஷன் ஆகும் 'தூங்காவனம்'

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து முடித்துள்ள 'தூங்காவனம்' திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

'வேதாளம்' டப்பிங்கை தொடங்கினார் அஜீத்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள 'வேதாளம்' திரைப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் கடந்த வாரம் வெளியாகி...

மனோரமாவுக்கு திருஷ்டி கழித்த கமல் மகள்

ஆயிரம் படங்களுக்கும் மேல் நடித்த அதிசய நாயகி மனோரமா நம்மைவிட்டு மறைந்த சோகத்தில் தமிழ் திரையுலகமே மூழ்கியுள்ள நிலையில்...