close
Choose your channels

ஷங்கர் இயக்கி வரும் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. !

Tuesday, October 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2’ மற்றும் ராம்சரண் தேஜா நடித்து வரும் ’கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கி வருகிறார்.

'இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தாலும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளில் அவர் தீவிரம் பாராட்டி வருகிறார். அதேபோல் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது

இந்த நிலையில் ’கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் சிங்கிள் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமன் இசையில் உருவாகி இருக்கும் ’ஜா ரா கண்டி’ என்று தொடங்கும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராம்சரண் தேஜா ஜோடியாக க்யாரா அத்வானி நடித்து வரும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரகனி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தில் ராஜு தயாரித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment